செய்திகள் மலேசியா
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள பாழடைந்த வணிகப் பகுதிகளை மேம்படுத்த வேண்டும்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள பாழடைந்த வணிகப் பகுதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டார்.
இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் ஜாலான் மஸ்ஜித் இந்தியா சுற்றுப்பகுதிகளை அவர் பார்வையிட்டார்.
மேலும், ஜாலான் மஸ்ஜித் இந்தியா பல ஆண்டுகளாக ஒரு சுற்றுலா தலமாக விளங்கிய நிலையில், அங்குள்ள பல வணிகப்பகுதிகள் மோசமான நிலையில் பாழடைந்து காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
ஜாலான் மஸ்ஜித் இந்தியா அதிக போக்குவரத்து நிறைந்த பகுதி என்றும் கூடிய விரைவில் சுற்றியுள்ள வணிகப் பகுதிகளையும் கடைகளையும் மேம்படுத்தும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
- கௌசல்யா ரவி
தொடர்புடைய செய்திகள்
October 4, 2026, 3:47 pm
தனித்து போட்டியிடும் தேசிய முன்னணியின் முடிவை மஇகா முழுமையாக வரவேற்கிறது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 4, 2026, 3:28 pm
நஜிப் மன்னிப்பு விவகாரத்தில் அந்தோணி லோக் அல்ல; ஜசெகவே வெளியேற வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 4, 2026, 11:40 am
மலாக்கா மாநில தேர்தல்: 4 தொகுதிகளில் போட்டியிட பாஸ் கட்சிக்கு வாய்ப்பு?
October 4, 2026, 10:08 am
