நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலுக்கு வருகை தந்த முதல் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தான்: முஹம்மது காதிர் அலி

கோலாலம்பூர்:

தலைநகர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலுக்கு வருகை தந்த முதல் பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திகழ்கிறார்.

கெபிமாவின் ஆலோசகர் முஹம்மது காதிர் அலி இதனை கூறினார்.

மலேசிய இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் அடையாளமாக மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசல் விளங்குகிறது.

இப்பள்ளிவாசலுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வர வேண்டும் என கடந்த ஓராண்டுக்கும் மேலாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

கடந்தாண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபின் அவர் இங்கு வருவதாக உறுதி அளித்தார். ஆனால் அதற்குள் இப்பகுதியில் நிகழ்ந்த அசம்பாவிதத்தால் அவரின் வருகை தள்ளிப்போனது.

இந்நிலையில் அவர் இன்று மஸ்ஜித் இந்தியாவிற்கு வருவதாக நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசல் நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.

இப் பள்ளிவாசலுக்கு பெர்லிஸ் சுல்தான், சுல்தான் சிராஜுடின் மாமன்னராக இருந்த போது வருகை தந்தார்.

அதன் பின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப் பள்ளிவாசலுக்கு வருகை தந்துள்ளார். மேலும் இப்பள்ளிவாசலுக்கு வருகை தந்த முதல் பிரதமரும் அவர் தான்.

பிரதமரின் வருகை மலேசிய இந்திய முஸ்லிம் மக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset