நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கனடா அமெரிக்காவின் 51ஆவது மாகாணமா? டிரம்பின் பரிந்துரையை கனடா நாடு நிராகரிப்பு 

வாஷிங்டன்: 

கனடா அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக வரலாம் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற டிரம்ப் கூறியிருக்கும் நிலையில் அந்த பரிந்துரையை கனடா நாடு நிராகரித்தது 

கனடா ஒருபோதும் அமெரிக்காவின் ஓர் அங்கத்துவமாக இருக்காது என்று முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ருடோ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார் 

இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், தொழிற்துறை மற்றும் சமூகங்கள் யாவும் தொடர்ந்து பேணப்படும் என்று அவர் தெரிவித்தார் 

இதற்கு முன், பல முறை டிரம்ப் கனடாவை அமெரிக்காவின் ஓர் அங்கத்துவமாக வருவதற்கு கேட்டுக்கொண்டிருந்தார் 

டிரம்பின் மிரட்டலுக்கும் அச்சுறுதலுக்கும் கனடா ஒருபோதும் அடிபணியாது என்று கனடா நாட்டின் வெளியுறவு அமைச்சர் மெலானி ஜொலி கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset