நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூடுதல் உத்தரவை அரசாங்கம் மறைக்கவில்லை: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

டத்தோஶ்ரீ நஜிப்பின் வீட்டுக் காவலில் வைக்கப்படுவது தொடர்பான கூடுதல் உத்தரவை அரசாங்கம் மறைக்கவில்லை.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

நஜிப்பிற்கான கூடுதல் உத்தரவை அரசாங்கம் மறைத்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இக்குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். மேலும் இந்த கூடுதல் ஆவணம் குறித்து தனக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

உண்மையில் இதை அரசாங்கம் மறைக்கவில்லை. தகவல் தொடர்பு அமைச்சரான நானே அதை பார்க்கவில்லை.

அதே வேளையில் இது பொது மன்னிப்பு வாரியத்தை உள்ளடக்கியது என்று நான் நம்புகிறேன்.

இந்த வழக்கை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் முடிவு செய்திருப்பது அரசாங்கத்துக்கும் தெரியும்.

வழக்கின் போக்கை பாதிக்காத சில விஷயங்களில் நாங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எடுக்க வேண்டும்.

புத்ராஜெயாவில் நடைபெற்ற வாரந்திர செய்தியாளர் சந்திப்பில் ஃபஹ்மி இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset