செய்திகள் மலேசியா
இந்தியா-மலேசியா உறவு மேலும் வலுவடையும்: கோபிந்த் சிங் டியோ
புது டெல்லி:
இந்தியா - மலேசியா இடையிலான உறவுகள் எதிர்காலத்தில் மிகவும் வலுவாகவும் மெருகேறி சிறப்பாகவும் இருக்கும் என மலேசியாவின் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் பல்துறை கூட்டமைப்புகளில் விரிவான வளர்ச்சியின் வாய்ப்புகள் உள்ளதாக அவர் கூறினார்.
குறிப்பாக, கணினி தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, இலக்கவியல் சேவைகள் ஆகிய துறைகளில், இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான பெரிய அளவிலான வாய்ப்புகள் இருப்பதாக இந்தியாவில் நடைபெறும் பரவாசி 2025 மாநாட்டில் கலந்து கொண்ட அவர் சுட்டிக் காட்டினார்.
இந்தியா இலக்கவியல் துறையில் மிக வேகமான வளர்ச்சியை எட்டியுள்ளது. இதன் அனுபவம், முன்னேற்றம் மலேசியாவுக்கு மிகுந்த ஊக்கமளிக்கின்றது என்று கோபிந்த் சிங் டியோ பாராட்டினார்.
மேலும், இரு தரப்பிலும் பல்வேறு தொழில்நுட்பமான, வணிகக் கூட்டணிகள் உருவாகி வருவதால், இந்த ஒத்துழைப்புகள் விரைவில் நல்ல பலனை உருவாக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின் படி, இரு நாடுகளும் தங்களின் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றன.
இருநாடுகளின் நீண்டகால உறவுகள், குறிப்பாக பொருளாதாரம், இலக்கவியல் துறையில், முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் வளர்ச்சியுடன் இணைந்து, மலேசியாவும் தன்னுடைய இலக்கவியல் மாற்றத்தை விரைவாக நிறைவேற்ற புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தும் என்ற நம்பிக்கையும் தெரிவிக்கப்பட்டது.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
January 9, 2025, 12:26 pm
கேமரன் மலையில் உள்ள தாமான் எக்கோ ரிம்பா மோசி ஃபோரஸ்ட் தற்காலிகமாக மூடப்பட்டது
January 9, 2025, 11:58 am
நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டிய நேரம் இது: பிரதமர் அன்வார்
January 9, 2025, 11:47 am
பள்ளிவாசலின் பாரம்பரியம் சுற்றுலாத் துறையின் விரிவான காணொளியில் சேர்க்கப்படும்: சுற்றுலா அமைச்சர்
January 9, 2025, 11:44 am
இந்தோனேசிய நிறுவனங்கள் மலேசியாவில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படும்: பிரதமர்
January 9, 2025, 11:43 am
பாட்டில் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியதாலே கவிஞர் கண்ணதாசன் காலம் கடந்தும் வாழ்கிறார்: டத்தோஸ்ரீ சரவணன்
January 9, 2025, 11:41 am