நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜனவரி 10ஆம் தேதி முதல் பகாங்கின் ஆறு மாவட்டங்களில்  கனமழை பெய்யும்: மெட் மலேசியா

குவாந்தான்:

வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் பகாங்கின் ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

மெட் மலேசியா எனப்படும் மலேசிய வானிலை ஆய்வுத் துறை இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

ஜனவரி 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை இக்கனமழை பெய்யும்.

ஜெராண்டுட், மாரான், குவாந்தான். பெரா, பெக்கான், ரொம்பின் ஆகிய மாவட்டங்கள் இந்த கனமழையால் பாதிக்கப்படும்.

இதைத் தொடர்ந்து தேசிய வெள்ள முன்னறிவிப்பு, எச்சரிக்கை மையமும் சம்பந்தப்பட்ட ஆறு மாவட்டங்களில் பல பகுதிகளில் வெள்ள அபாய முன்னறிவிப்புகளை வெளியிட்டது.

மேலும் நீர்ப்பாசனம், வடிகால் இலாகா தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும்.

சம்பந்தப்பட்ட ஆற்றுப்படுகையில் குறிப்பிடத்தக்க மழை பெய்தால் வெள்ள அபாய எச்சரிக்கைகளை புதுப்பிக்கும்  என்று மெட் மலேசியா ஓர் அறிக்கையின் வாயிலாக கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset