நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அக்சியத்தா அரங்கின் மேற்கூரை பாதிப்பால் அரங்கினுள் மழை: PERBADANAN STADIUM MALAYSIA  மன்னிப்பு கேட்டுக்கொண்டது 

கோலாலம்பூர்: 

மலேசியாவில் நடைபெற்று வரும் மலேசிய பொது பூப்பந்து போட்டியின் போது அரங்கினுள் மழை பெய்த விவகாரம் தொடர்பாக PERBADANAN STADIUM MALAYSIA அமைப்பு அனைத்து தரப்பிடமும் மன்னிப்பு கேட்டு கொண்டது 

பழைய கூரையை மாற்றும் நடவடிக்கையில் AXIATA ARENA அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நடவடிக்கையை பொதுப்பணி ஊழியர்கள் மேற்கொண்டு வருவதால் ஓராண்டாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மழை நீர் நேராக பூப்பந்து அரங்கத்தினுள் பொழிந்ததால் நீரை அப்புறப்படுத்தும் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டதாக PSM தலைமை செயல்முறை அதிகாரி இலியாஸ் ஜமில் கூறினார். 

இந்த மாதிரியான சம்பவங்கள் இனிமேல் நிகழாமல் இருப்பதை PSM உறுதிப்படுத்தும் என்று PSM ஓர் ஊடக அறிக்கையின் வாயிலாக கேட்டுகொண்டது 

முன்னதாக, மலேசிய பொது பூப்பந்து போட்டியின் போது மழைநீர் அரங்கினுள் பொழிந்தது. இதனால் ஆட்டம் சிறிது நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset