நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இந்தியப் பொது பூப்பந்து, இந்தோனேசியா மாஸ்டர்ஸ் ஆகியப் போட்டிகளில் லீ ஷி ஜியா பங்கேற்கவில்லை

கோலாலம்பூர், ஜனவரி:

மலேசிய ஆண்கள் ஒற்றையர் வீரர் லீ ஷி ஜியா, இந்த மாதம் நடைபெறும் அனைத்து போட்டிகளிலிருந்தும் விலகியுள்ளார்.

உலகப் பூப்பந்து சமேளனம் (BWF) தனது இணையத் தளத்தில் வெளியிட்ட வீரர்களின் பட்டியலில், உலகின் 6-ஆம் நிலை பேட்மிண்டன் வீரரான லீ ஷி ஜியா, ஜனவரி 14-ஆம் தேதி முதல் 19 வரை நடைபெறவுள்ள இந்தியப் பொது பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்கவில்லை.

26 வயதான லீ ஷி ஜியா, ஜனவரி 21 முதல் 26 வரை ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோரா செனயான் அரங்கில் நடைபெறவுள்ள 2025 இன்தோனேசிய மாஸ்டர்ஸ் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.

மேலும், லீ ஷி ஜியா, Axiata அரங்கில் இன்று தொடங்கிய மலேசியா பொது பேட்மிண்டன் போட்டியின் தொடக்கப் பருவத்தின் போட்டியிலிருந்தும் விலகியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை Team  LZJ இன் சமூக ஊடக இடுகையின்படி, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர், கடந்த மாதம் சீனாவின் ஹாங்சோவில் ஏற்பட்ட வலது கணுக்கால் தசைநார் காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை என கூறப்பட்டது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset