நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கோபா டெல் ரெய் கிண்ணம்: ரியல்மாட்ரிட் முன்னேற்றம்

மாட்ரிட்:

கோபா டெல் ரெய் கிண்ண கால்பந்து போட்டியில் சுற்று 16க்கு ரியல்மாட்ரிட் அணியினர் முன்னேறி உள்ளனர்.

கார்தேகனோவா அரங்கில் நடைபெற்ற சுற்று 32 ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் மினேரா அணியை சந்தித்து விளையாயாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் மினேரா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ரியல்மாட்ரிட் அணிக்காக அர்டா குலார் இரு கோல்களை அடித்தார்.

மற்ற கோல்களை பெட்ரிகோ வால்வெர்ட், கமாவின்கோ, லூகா மோட்ரிச் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து ரியால்மாட்ரிட் அணியினர் கோபா டெல் ரெய் கிண்ண கால்பந்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் நாட்டிங்காம் போரஸ் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் வோல்வேர்ஹாம்டன் அணியிடம் தோல்வி கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset