நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

8 வாகனங்களை மோதி தள்ளிய பேருந்து ஓட்டுநர் பலத்த காயமடைந்தார்

அலோர்காஜா:

எட்டு வாகனங்களை மோதி தள்ளிய பேருந்து ஓட்டுநர் பலத்த காயங்களுக்கு இலக்கானார்.

மலாக்கா தீயணைப்புத் துறை இயக்குநர் முகமட் பிசார் ஹஜிஸ் இதனை தெரிவித்தார்.

ஆயர்கெரோ அலோர்காஜா லெபோ சுங்கை உடாங்கில் இவ்விபத்து நிகழ்ந்தது.

இச்சம்பவம் குறித்து காலை 10.28 மணிக்கு தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

உடனே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

சம்பவ இடத்தில் ஒரு விரைவு பேருந்து, மூன்று லோரி உட்பட பல வாகங்களை மோதி விபத்துக்குள்ளாகி இருந்தது.,

இவ்விபத்தில் 13 ஆண்கள், 2 பெண்கள் என 15 பேர் பாதிக்கப்ப்பட்டனர்.

இதில் பேருந்து ஓட்டுநர் பலத்த காயங்களுக்கு இலக்கானார். அதே வேளையில் மற்றவர்கள் லேசான காயங்களுக்கு இலக்காகினர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset