
செய்திகள் தமிழ் தொடர்புகள்
மாநில உரிமைகளை பறிக்கும் யுஜிசியின் முடிவு கண்டனத்திற்குரியது: பேராசிரியர் ஜவாஹிருல்லா
சென்னை:
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான புதிய விதிமுறைகளை பல்கலைக்கழக நிதி நல்கை ஆணையம் ஆகிய யூஜிசி வெளியிட்டுள்ளது. இதில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான மாநில அரசின் உரிமைகள் முற்றாக பறிக்கப்பட்டுள்ளன. இது கடும் கண்டனத்திற்குரியது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா கூறினார்.
தேடுதல் குழுவும் நியமன பொறுப்பும் மாநில ஆளுநரையே சார்ந்தது என்று இந்த விதிகள் திருத்தப்பட்டுள்ளன. இது மிகுந்த வேதனைக்குரியது. கடுமையான கண்டனத்துக்குரியது என்று அவர் மேலும் கூறினார்.
கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் காலத்தில் கல்வியில் மாநில உரிமைகளை முற்றாகப் பறிக்கின்ற அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையை ஒன்றிய அரசின் கைப்பாவையாக இருந்து யுஜிசி மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.
பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையம் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் ஆகிய மௌலானா அப்துல் கலாம் ஆசாத் அவர்களால் ஏற்படுத்தப்பட்டது.
அந்த காரணத்திற்காகவே யுஜிசிஐ அழிக்க வேண்டும் என்ற மதவாத நோக்கில் செயல்பட்டுவந்த ஒன்றிய பாஜக அரசு இப்பொழுது யுஜிசி யின் வாயிலாகவே மாநில உரிமைகளை பறிக்க முற்படுவது நகைமுரணாக தோன்றுகிறது .
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கின்ற முழு அதிகாரமும் மாநில அரசுக்கே இருக்க வேண்டும் என்று நெடுங்காலமாக மமக வலியுறுத்தி வருகிறது.
மாநில உரிமைகளைப் பறிக்கும் மாற்றங்கள் எவற்றைச் செய்தாலும் தமிழ்நாடு கொதிகலனாக மாறும் என்பது தவிர்க்க முடியாததாகும்.
உயர்கல்வியில் இந்தியாவின் ஏனைய மாநிலங்களை விட முதல் நிலையில் இருக்கும் தமிழ்நாட்டில் உயர் கல்வி கட்டமைப்பை சிதைக்கின்ற வகையிலான மாற்றங்களை ஒன்றிய அரசின் கைப்பாவை ஆகிய யூஜிசி கொண்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.
இந்த மாற்றங்கள் உடனடியாக கைவிடப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 4:15 pm
அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: அமீத் ஷா கருத்தை மறுத்து இபிஎஸ்
July 14, 2025, 6:56 am
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
July 13, 2025, 9:31 am
பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் உருக்கமான கடிதம்: உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்
July 12, 2025, 8:05 pm
இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் கிடையாது: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
July 12, 2025, 7:39 pm
நாளை வைரமுத்துவின் வள்ளுவர் மறை உரைநூல் வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
July 10, 2025, 5:07 pm
படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் தர மறுப்பதா?: விஜய் கண்டனம்
July 10, 2025, 12:23 pm