நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கோம்பாக் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி: ரவாங் தமிழ்ப்பள்ளி அதிரடி

கோம்பாக்: 

கோம்பாக் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான காற்பந்தாட்டப் போட்டி ஜனவரி 1 ஆம் திகதி தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி திடலில் நடைபெற்றது. 

காலை 8.30 க்குத் தொடங்கிய இந்தக் காற்பந்தாட்டப் போட்டியில் கோம்பாக் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பள்ளிகள் கலந்துகொண்டன.

இந்தக் காற்பந்தாட்டப் போட்டி நடைபெறுவது இது மூன்றாவது ஆண்டாகும். இவ்வாண்டு இப்போட்டியினை தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியில் மேலாளர் வாரியம் மற்றும் கோம்பாக் மாவட்ட தலைமையாசியர் கழகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு புக்கிட் டாரா தமிழ்ப்பள்ளியிலும் 2023ஆம் ஆண்டு ரவாங் தமிழ்ப்பள்ளியிலும் இப்போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கோம்பாங் தலைமை ஆசிரியர் கழகத்தின் தலைவரும் தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் இந்தக் காற்பந்தாட்டப் போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

அவர் தனது உரையில் இக்காற்பந்தாட்டப் போட்டியை ஏற்பாடு செய்த பள்ளி மேலாளர் வாரியத்திற்கு நன்றி தெரிவித்ததோடு அவர்களோடு இணைந்து பணியாற்றிய முன்னாள் மாணவர் சங்கத்துக்கும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார். மேலும் இந்தக் காற்பந்தாட்டப்போட்டி உருவாகித் தொடர காரணமாக இருந்த ஆசிரியர் லிங்கமணி அவர்களையும் பாராட்டினார்.

இவ்வருட காற்பந்தாட்டப் போட்டி வழக்கம்போல ஆண் மற்றும் பெண் பிரிவுகளுக்கு நடைபெற்றது. ஆண் பிரிவில் ரவாங் தமிழ்ப்பள்ளியும் பெண் பிரிவில்  பத்து ஆராங் தமிழ்ப் பள்ளியும் வெற்றிப்பெற்றன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset