நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமணி விதைகள் முளைத்தன: இஸ்ரோ

புது டெல்லி:

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமணி விதைகள் முளைத்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்தது.

கடந்த டிசம்பர் 30ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஸ்பேடெக்ஸ் இரு விண்கலன்களை பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் மூலம் இஸ்ரோ அனுப்பியது.

அத்துடன் ராக்கெட்டில் விண்வெளிக்கு 8 காராமணி விதைகளை இஸ்ரோ அனுப்பிவைத்தது.

சிறு பெட்டிக்குள் வெப்பச் சூழலில் அந்த விதைகள் வைக்கப்பட்டிருந்த விதைகள் 4 நாள்களில் முளைத்துள்ளதாகவும், அவற்றில் விரைவில் இலைகள் துளிர்விடும் என்றும் எக்ஸ் தளத்தில் இஸ்ரோ பதிவிட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset