நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பைடன் மனைவிக்கு விலை உயர்ந்த பரிசளித்த மோடி

வாஷிங்டன்: 

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு 20,000 டாலர்கள்  மதிப்பிலான வைரத்தை பிரதமர் மோடி பரிசளித்து, உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

2023-ஆம் ஆண்டில் ஜில் பைடனுக்கு வேறு எந்த வெளிநாட்டுத் தலைவரும் விலை உயர்ந்த பரிசை அளிக்கவில்லை.

அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட வருடாந்திர கணக்கு விவரங்களில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது., 2023-இல் ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்பில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரின் மனைவி ஜில் பைடன் ஆகியோருக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் பரிசளித்துள்ளனர்.

Jill Biden's most expensive gift in 2023, a $20,000 diamond from PM Modi |  World News - Hindustan Times

அமெரிக்காவுக்கு கடந்த 2023 ஜூன் மாதம் சென்ற பிரதமர் மோடி ஜில் பைடனுக்கு 20,000 டாலர்கள் மதிப்பில் 7.5 கேரட் வைரத்தைப் பரிசளித்தார்.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் உள்ள அதிபர் மனைவியின் அலுவலகம், இந்த வைரத்தை பயன்படுத்த எடுத்துக்கொண்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset