நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் 3 மாடி தரை வீட்டில் வேகமாக பரவிய தீ: அருகில் இருந்த 35 பேர் உடனடியாக அகற்றப்பட்டனர் 

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் உள்ள 3 மாடி தரை வீட்டில் இன்று (5 ஜனவரி) அதிகாலை வேளையில் தீ மூண்டது. அதில் யாரும் காயமடையவில்லை.

இலக்கம் 305 ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் உள்ள வீட்டின் முதல் மாடி தீப்பற்றி எரிந்தது. 

அது மேல் மாடிகளுக்கும் பரவிய நிலையில் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் வீட்டிற்குள் நுழைந்து தீயை அணைக்க பெரு முயற்சி செய்தனர்.

அதிகாரிகள் வீட்டிற்குள் இருந்தும் வெளியே இருந்தும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

May be an image of lighting

சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ முற்றிலுமாக  அணைக்கப்பட்டது.

தீயணைப்பாளர்களும் காவல்துறையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்கம்பக்கத்தில் குடியிருக்கும் 35 பேரை உடனடியாக வெளியேற்றினர்.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் Facebook தளத்தில் பதிவேற்றம் செய்த படங்களில் வீட்டின் உட்புறங்கள் சேதமடைந்திருப்பதைக் காணமுடிகிறது.

தீ எப்படி ஏற்பட்டது, எப்படி பரவியது என்பது குறித்து அதிகாரிகள் தெரிவிரமாக விசாரித்து வருகின்றனர்.

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

+ - reset