நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கை வரவு செலவுத் திட்டம் பிப்ரவரி 17ஆம் தேதி சமர்ப்பிப்பு

கொழும்பு:

வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் மார்ச் 21ஆம் தேதி வரை 26 நாட்கள் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பிப்ரவரி 18ஆம் தேதி தொடக்கம் பிப்ரவரி 25ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன் அது தொடர்பான வாக்கெடுப்பு 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.

மேலும், வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் பிப்ரவரி 27ஆம் தேதி முதல் மார்ச் 21ஆம் தேதி வரை 04 சனிக்கிழமைகள் உட்பட நடைபெறவுள்ளது.

மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு மார்ச் 21 அன்று பிற்பகல் நடைபெற உள்ளது.

- நிஹார் தய்யூப் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset