நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

HMPV நோய்க்கிருமி COVID-19 போன்ற ஒன்றா?: சீன அரசு மறுப்பு 

பெய்ஜிங்:

சீனாவில்  வேகமாக பரவிவரும் சளிக்காய்ச்சல் குளிர்காலத்தில் தோன்றும் வழக்கமான ஒன்றுதான் என்று அந்நாடு தெரிவித்திருக்கிறது. 

HMPV நோய்க்கிருமி COVID-19 போன்ற அறிகுறிகளைக் காட்டுவதாகச் சொல்லப்படுகிறது. 

உலக நாடுகளிடையே குறிப்பாகப் பக்கத்து நாடுகளில் அது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. 

ஆனால் கவலைப்பட ஏதுமில்லை என்று சீனா கூறியுள்ளது.

சீனாவின் மருத்துவமனைகளில் மக்கள் முகக்கவசங்களை அணிந்திருக்கும் புகைப்படங்களும் காணொலிகளும் சமூக ஊடகத்தளங்களில் காணப்படுகின்றன. 

சீனா அது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாவ் நிங் (Mao Ning) குளிர்காலத்தில் இதுபோன்ற சுவாசத்தைப் பாதிக்கும் தொற்றுக்கிருமிகள் பரவுவது இயல்பு என்று சொன்னார். 

சீன அரசாங்கம் தம் நாட்டு மக்கள், வெளிநாட்டினரின் நலனைக் காப்பதாகச் சொன்ன அவர் சுற்றுப்பயணிகள் சீனாவுக்கு வருவது பாதுகாப்பானது என்று உத்தரவாதம் தந்தார். 

ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset