நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனாவில் வேமாக பரவும் HMPV வைரஸ்

புது டெல்லி:

சீனாவில் HMPV வைரஸ் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

2020-இல் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியது. இது சீனாவில் இருந்து பரவியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், HMPV வைரஸால்  சீனாவில் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை அந்நாடு மறுத்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"குளிர்காலத்தில் சுவாச தொற்று பாதிப்புகள் உச்சமடைவது வழக்கமானதுதான். நடப்பாண்டில் சுவாச தொற்றின் தீவிரம், கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது. எனவே, சீனா வருவதற்கு யாரும் அச்சப்பட வேண்டாம்' என்றார்.

இந்த நோய் குறித்து  உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset