நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்தில் மதம் பிடித்த யானை: சுற்றுப் பயணியை கொன்றது 

பேங்காக்:

தாய்லாந்தில் வனவிலங்குக் காப்பகத்தில் இருந்த மதம் பிடித்த யானை ஒன்று சுற்றுப்பயணியைத் தாக்கிக் கொன்றது.

பாங் கா (Phang Nga) வட்டாரத்தின் கோ யௌ (Koh Yao) யானை பராமரிப்பு நிலையத்தில் அந்தச் சம்பவம் நடந்தது.

ஸ்பெயினைச் சேர்ந்த 23 வயது பிளாண்கா ஒஜான்குரேன் கார்சியா (Blanca Ojanguren García) யானையைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது அது தனது தந்தத்தால் அவரைத் தாக்கியது.

சுதந்திரமாய் உலவித் திரியும் இடத்தில் சுற்றுப்பயணிகளுடன் இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டதால் பதற்றத்தில் யானைக்கு மதம் பிடித்திருக்கலாம் என்று நிபுணர்கள் சிலர் கூறினர்.

பேங்காக்கில் உள்ள ஸ்பெயின் துணைத் தூதரகம், மாண்ட பெண்ணின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு உரிய ஆதரவளிப்பதாக ஸ்பெயினின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

+ - reset