நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

1,900 விமானச் சேவைகளைக் குறைக்க ஜேஜு ஏர்லைன்ஸ் திட்டம்

சியோல்: 

ஜேஜு ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் வரும் மார்ச் மாதத்திற்குள் சுமார் 1,900 உள்நாட்டு, அனைத்துலக விமானச் சேவைகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. 

கடந்தாண்டு டிசம்பர் 29-ஆம் தேதி ஜேஜு ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் மட்டுமே உயிர்பிழைத்த நிலையில் 179 பேர் மாண்டனர்.

அதனைக் கருத்தில்கொண்டு பாதுகாப்புச் சோதனை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நுழைவுச்சீட்டுகளை வாங்கிய பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று நிறுவனம் கூறியது.

ஜேஜு ஏர்லைன்ஸின் உள்நாட்டு விமானச் சேவைகளைக் குறைக்கும் நடவடிக்கை அடுத்த வாரத்திலிருந்து தொடங்கக்கூடும். 

அனைத்துலக விமானச் சேவைகளைக் குறைக்கும் நடவடிக்கை இம்மாதத்தின் மூன்றாம் வாரத்திலிருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset