
செய்திகள் தொழில்நுட்பம்
மைக்ரோசாப்ட் இந்த நிதியாண்டில் 80 பில்லியனைச் செயற்கை நுண்ணறிவில் செலவிடும்
நியூ யார்க்:
செயற்கை நுண்ணறிவில் (AI) சுமார் 80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிட திட்டமிடுவதாகவும், இது எதிர்கால வளர்ச்சியின்போது அமெரிக்கா இந்தத் தொழில்நுட்பத்தில் உலகில் முன்னணி நிலையில் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டது என மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பல வழிகளில், செயற்கை நுண்ணறிவு இக்காலத்தின் மின்சக்தி போன்று செயல்படுகிறது. இதனால் அடுத்த 4 ஆண்டுகள் அமெரிக்காவின் தொழில்நுட்ப வெற்றிக்கான அடித்தளத்தை அமைக்க முடியும் என ஸ்மித் கூறியுள்ளார்.
பல்கலைக்கழகங்களில் மற்றும் தேசிய அறிவியல் நிதியத்துடன் ஆய்வுகளுக்கான நிதி அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மூலம் தங்களுக்கு ஆதரவு தர வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்பையும், காங்கிரஸையும் செயற்கை நுண்ணறிவு புத்தாக்கத்திற்கு ஆதரவினை விரிவாக்குமாறு ஸ்மித் அழைப்பு விடுத்தார்,
சீனா, அமெரிக்கா, உலகின் பல நாடுகளில் தங்கள் செயற்கை நுண்ணறிவு முறைகளை பரப்புவதில் போட்டியிடுகின்றன என்பதையும் ஸ்மித் சுட்டிக் காட்டினார்
ஆகவே, அமெரிக்காவுக்கு உலகளாவிய எந்திரங்களை விரைவாக ஆதரிக்க ஒரு நிபுணத்துவ சர்வதேச திட்டம் தேவை என்றார் அவர்.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm
பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்
July 31, 2025, 10:18 pm
ரூ.12,000 கோடியிலான இஸ்ரோ - நாசாவின் நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
July 28, 2025, 1:37 pm
ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலை
July 28, 2025, 10:50 am
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
July 16, 2025, 5:58 pm
விண்ணிலிருந்து மண்ணில் கால்பதித்தார் சுபான்ஷு சுக்லா
July 3, 2025, 4:36 pm