நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதவர்கள் கடை வைக்க எதிர்ப்பு

பிரயாக்ராஜ்: 

உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில்  மகா கும்பமேளா வரும் 13-ஆம் தேதி தொடங்கும் கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதவர்கள் கடை வைக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அந்த இடத்தை அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் மஹந்த் ரவீந்திர புரி பார்வையிட்டு பின்னர் அளித்த பேட்டியில், கும்பமேளா நடைபெறும்போது பிரயாக்ராஜில் டீக்கடைகள், பழச்சாறு கடைகள், பூக்கடைகள் வைப்பதற்கு இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி அளிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதித்தால் அவர் எச்சில் துப்பி, சிறுநீர் கழித்து அசுத்தம் செய்வர்.

இந்நிகழ்ச்சியின் பாதுகாப்பு மற்றும் புனிதத்தை காக்க இந்துக்கள் அல்லாதோரை இங்கு அனுமதிக்காமல் இருப்பது அவசியம் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset