நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தில்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தில் தீ

புது டெல்லி: 

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர்இந்தியா விமானத்தில் திடீரென  தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஹாங்காங்கில் இருந்து புது டெல்லிக்கு வந்திறங்கிய ஏர் இந்தியா விமானத்தில் இருந்து பயணிகள் வெளியேறத் தொடங்கினர்.

அப்போது, விமானத்தின் வால் பகுதியில் உள்ள பேட்டரி மின் அமைப்பில் தீப்பற்றியது.  

இதனால் தானாக பேட்டரி ஷட்டவுனானது. இதில் விமானத்துக்கு சிறிய சேதம் ஏற்பட்டது. பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஏர் இந்தியா தெரிவித்தது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset