நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஒரு மாதத்துக்கு பிறகு கேரளத்தில் இருந்து புறப்பட்டது பிரிட்டனின் F-35 போர் விமானம்

புது டெல்லி: 

கேரளத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொழில்நுட்ப காரணத்தால் நிறுத்தப்பட்டிருந்த F-35 பிரிட்டன் போர் விமானம்  புறப்பட்டது.

விமானநிலைய கட்டணமாக சுமார்  ரூ.6 லட்சம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜூன் 14ஆம் தேதி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் F-35 போர் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

பிரிட்டனில் இருந்து வந்த பொறியியலாளர்கள் அந்த விமானத்தில் பழுது பார்ப்புப் பணிகளை மேற்கொண்டனர்.

பழுதுபார்ப்பு பணி நீண்ட நாள்கள் நீடித்ததால் விமானத்தை பிரித்து கொண்டு செல்லவும் முடிவு செய்தனர்.

ஆனால் ஒரு மாதத்துக்கு பிறகு விமானத்தை சரி செய்து அவர்கள் அனுப்பி வைத்தனர். அந்த விமானம் ஆஸ்திரேலியாவின் டார்வின் நகருக்குப் புறப்பட்டுச் சென்றது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset