நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உ.பி.யில் 7 ஆண்டுகளாக போலி தூதரகம் நடத்தியவர் கைது

புது டெல்லி: 

உத்தர பிரதேச மாநிலத்தில் 7 ஆண்டுகளாக போலி தூதரகம் நடத்திய வெளிநாடுகளுக்கு வேலைவாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைகது செய்யப்பட்டார்.

ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்ற அவர் காஜியாபாதில் பகுதியில் 2 மாடிகள் கொண்ட சொகுசு பங்களாவை  வாடகைக்கு எடுத்து அதில் வெஸ்ட்டார்க்டிகா நாட்டு தூதரகம் என்ற பெயரில் போலி தூதரகத்தை நடத்தி வந்துள்ளார்.

தூதரக அதிகாரிகள் பயன்படுத்தும் கார்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளை பொருத்தி நகரில் வலம் வந்துள்ளார்.

அவரது அலுவலகத்தில் போலியான தூதரக பாஸ்போர்டுகள், பல்வேறு நாடுகளின் கரன்சிகள், பல்வேறு நாட்டுத் தலைவர்களுடனான போலி புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

செபோர்கா, பவுல்வியா, லோடோனியா போன்ற ஊர்பேர் தெரியாத அங்கீகரிக்கப்படாத நாடுகளின் தூதரக பிரதிநிதி என்று ஜெயின் தன்னை அறிமுகம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset