நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மும்பையில் கடும் மழை: நிலச்சரிவில் கட்டடம் சரிந்து விழுந்தது

மும்பை:

மும்பையின் பாண்டுப் (Bhandup) வட்டாரத்தில் பல மணி நேரம் அடைமழை பெய்ததால் கட்டடம் ஒன்று சரிந்து விழுந்தது. அதைக் காணொலியாக எடுத்துச் சமூக ஊடகங்களில் பலர் பகிர்ந்தனர்.

அடைமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது காணொலியில் தெளிவாகத் தெரிந்தது. 

திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகளும் கட்டடங்களும் இடிந்து விழுந்தன. சிலர் தக்கத் தருணத்தில் அங்கிருந்து வெளியேறித் தப்பித்தனர்.

மழையின் காரணமாக முன்னெச்சரிக்கையாக அந்த வட்டாரத்தில் வசிக்கும் பலர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அதனால் எந்த உயிரிழப்பும் நேரவில்லை.

ஆனால் இந்த நிலச்சரிவை எச்சரிக்கை அறிகுறியாகக் கருதவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வர்ஷா கைக்வாட் (Varsha Gaikwad) X தளத்தில் பதிவிட்டார்.

அடைமழையின் காரணமாக மும்பை மாநகரம் முழுவதும் எச்சரிக்கை நிலையில் இருக்கிறது. 

மேலும் பல நிலச்சரிவையும் வெள்ளத்தையும் எதிர்ப்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset