நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மணிப்பூர் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார் முதல்வர்

இம்பால்:

மணிப்பூரில் கடந்த ஓராண்டாக நடைபெற்று வரும் இனக் கலவரத்துக்கு அந்த மாநில முதல்வர் பிரேன் சிங் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையினராக உள்ள குகிஜோ சமூகத்தினருக்கும் இடையேயான மோதலில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

முதல்வர் பிரேன் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த ஆண்டு மே முதல் அக்டோபர் வரை, மாநிலத்தில் 408 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றன. காவல் நிலையங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அனைத்து சமூகத்தினரும் ஒருவரையொருவர் மன்னித்து, கடந்த கால தவறுகளை மறக்க வேண்டும் என்றார்.

காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், மணிப்பூருக்கு பிரதமர் மோடி சென்று முதல்வர் பிரேன் சிங்கை போல, மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset