நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

லோஸ் ஏஞ்சல்ஸில் இரு விமானங்கள் மோதிக் கொள்ளவிருந்தன: தக்க நேரத்தில் விபத்து தவிர்க்கப்பட்டது

லோஸ் ஏஞ்சல்ஸ்:

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அனைத்துலக விமான நிலையத்தில் இரு விமானங்கள் விபத்துக்குள்ளாகவிருந்தன.

டெல்தா ஏர்லைன்ஸ் விமானமொன்று அட்லாண்டாவுக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. 

அதே வேளையில் கீய் லைம் ஏர் தனியார் விமானமொன்று ஓடுபாதையின் மறுபக்கத்திலிருந்து நுழையவிருந்தது.

இரு விமானங்களும் ஒன்றுக்கு ஒன்று மிக அருகில் இருந்தன.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி பீதியில் இரண்டு விமானங்களிடமும் நகர்வதை நிறுத்தும்படி அலறியதாக  கூறப்படுகிறது.

கீய் லைம் ஏர் விமானம் உடனடியாக நகர்வதை நிறுத்தியது.

அது வாஷிங்டன் டி.சியிலிருந்து கோன்சாகோ பல்கலைக்கழகத்தின் ஆண் கூடைப்பந்துக் குழுவைப் போட்டிக்காக லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அழைத்துச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset