நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கம்போடியா ஹோட்டலில் கைப்பெட்டி ஒன்றில் சடலம்

புனோம் பென்: 

கம்போடியாவின் ஹோட்டலில் கைப்பெட்டி ஒன்றில்
சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாண்ட ஆடவர் சீன நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர் என்றும் நம்பப்படுகிறது.

ஹோட்டல் ஊழியர் நேற்று முன்தினம் (29 டிசம்பர்) அறையைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது சடலத்தைக் கைப்பெட்டியில் பார்த்ததாக 8 World செய்தித்தளம் தெரிவித்தது.

அவர் உடனடியாக ஹோட்டல் உரிமையாளருக்குத் தகவல் சொன்னார்.

ஹோட்டல் உரிமையாளர் காவல்துறையைத் தொடர்புகொண்டார்.

கொலையாளியைக் கண்டுபிடிக்க காவல்துறை விரிவான விசாரணையை மேற்கொள்கிறது.

ஆடவர் தமது சீன நண்பருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

ஆடவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது நண்பரைக் காணவில்லை.

நண்பருக்குக் கொலையில் தொடர்பிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

+ - reset