நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விமான விபத்துக்குப் பிறகு 68,000 வாடிக்கையாளர்கள் ஜேஜூ ஏர் டிக்கெட் முன்பதிவுகளை ரத்து செய்தனர்

சியோல்:

விமான விபத்துக்குப் பிறகு 68,000 வாடிக்கையாளர்கள் ஜேஜூ ஏர் டிக்கெட் முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர்.

ஜேஜூ ஏர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் அண்மையில் விபத்துக்குள்ளானது.

இந்த விமான விபத்தில் கிட்டத்தட்ட 179 பேர் மரணமடைந்தனர்.

இவ்விபத்தின் அடிப்படையில் நேற்று மதியம் 1 மணி நிலவரப்படி 68,000 விமான முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்த எண்ணிக்கையில், 33,000 க்கும் மேற்பட்ட ரத்து உள்நாட்டு விமானங்களை உள்ளடக்கியது.

மேலும் 34,000 அனைத்துலக வழித்தடங்களுக்கானவை ஜேஜூ ஏர் கோ. ஓர் அறிக்கையின் வாயிலாக கூறியது.

விபத்துக்கு பின்னர் பயணங்களை ரத்து செய்யப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

பல ஏஜென்சிகள் இப்போது தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் தளங்களில் விளம்பரங்கள் அவற்றின் விளம்பர பிரச்சாரங்களை நிறுத்துகின்றன என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset