செய்திகள் உலகம்
கோவிட் 19 மரணங்கள் தகனம்: தெரிவுக்குழு நியமிக்குமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தனி நபர் பிரேரணை
கொழும்பு:
கோவிட் 19 தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை (ஜனாஸா) பலாத்காரமாகத் தகனம் செய்தமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு பொருத்தமான விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்துக்குத் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார்.
ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த பிரேரணையில் குறிப்பிட்டுள்ளதாவது:
கோவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கான இயலுமை உள்ளதென உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்த நிலையில், மேற்படி சடலங்ளை நல்லடக்கம் செய்வதால் நிலக்கீழ் நீரில் வைரஸ் கலப்பதற்கான அபாய நிலை உள்ளதாகக் கூறி கடந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட கொள்கை அளவிலான தீர்மானத்தின்படி செயற்பட்டது முற்றிலும் தவறு,
அந்த சடலங்களை உறவினர்களின் உடன்பாடின்றி தகனம் செய்தமையும் , பின்னர் அவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் செயற்பட்டமை சரியானதல்ல, தவறு என்று தெரிவித்து அரசாங்கமே உத்தியோகபூர்வமாக மன்னிப்பு கோரியிருந்தமையும் இந்த தொற்றினால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தமது சமய ரீதியான இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்கோ அல்லது குறித்த சடலங்களை பார்வையிடுவதற்கோ சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
இது குறித்து உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் எழுந்த எதிர்ப்புகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தகனம் செய்வதற்குப் பதிலாக ஓட்டமாவடியில் , மஜ்மா நகர் எனப்படும் தனிமையான பிரதேசத்தில் மேற்படி சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட போதிலும், குடும்ப உறவினர்கள் இறுதி கடமைகளைச் செய்வதற்கோ, மரியாதை செலுத்துவதற்கோ, உரிமை மறுக்கப்பட்டமை தொடர்பிலும், இந்த விவகாரத்தில் அரசாங்கம் பாரதூரமான தவறுகளை புரிந்துள்ளமையினாலும் குறிப்பிட்ட விடயங்களை உரிய முறையில் விசாரணை செய்து பொருத்தமான விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்கும்படியாக கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்தப் பிரேரணையில் (பா 28/2024) குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
January 4, 2025, 4:06 pm
சீனாவில் வேமாக பரவும் HMPV வைரஸ்
January 4, 2025, 3:41 pm
மைக்ரோசாப்ட் இந்த நிதியாண்டில் 80 பில்லியனைச் செயற்கை நுண்ணறிவில் செலவிடும்
January 4, 2025, 3:02 pm
1,900 விமானச் சேவைகளைக் குறைக்க ஜேஜு ஏர்லைன்ஸ் திட்டம்
January 2, 2025, 10:37 pm
பாகிஸ்தானில் பகத் சிங் நினைவு கண்காட்சி
January 2, 2025, 5:26 pm
டிரம்ப் ஹோட்டல் முன் வெடித்து சிதறிய டெஸ்லா கார்; பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம்: எலன் மஸ்க்
January 1, 2025, 10:08 pm
லோஸ் ஏஞ்சல்ஸில் இரு விமானங்கள் மோதிக் கொள்ளவிருந்தன: தக்க நேரத்தில் விபத்து தவிர்க்கப்பட்டது
December 31, 2024, 7:04 pm
கம்போடியா ஹோட்டலில் கைப்பெட்டி ஒன்றில் சடலம்
December 31, 2024, 12:54 pm
தென் கொரிய விமான விபத்து: உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்கிறது
December 31, 2024, 11:33 am