நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தென் கொரிய விமான விபத்து: உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்கிறது

சியோல்:

தென் கொரியாவில் ஜேஜு ஏர் விமான விபத்தில் மரணித்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நீடிக்கிறது.

அதனை விரைவாகச் செய்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. 

விபத்தில் மரணித்தவர்களின் உடல்களை அடையாளம் காணும்  பணியை மேற்கொள்ளும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

DNA பரிசோதனைகளை விரைந்து செய்ய கூடுதல் ஆய்வாளர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் உள்ளூர் விசாரணை அதிகாரிகளுக்கு அமெரிக்கத் தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியத்தின் இரு நிபுணர்கள் உதவி வருகின்றனர்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை தென் கொரியாவிலுள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி தரையில் மோதியதில் விபத்துக்குள்ளானது.

இந்த  விமான விபத்தில் சிக்கி 179 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விமானத்தில் 175 பயணிகள், ஆறு பணியாளர்கள் உள்பட மொத்தம் 181 பேர் இருந்துள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset