நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்தாண்டு வாழ்த்துகள் தொடர்பான புதிய மோசடி; எச்சரிக்கையாக இருங்கள்: பி.ப.சங்கம் நினைவூட்டல்

பினாங்கு:

அடுத்த சில நாட்களில், உங்கள் கைப்பேசியில்  புதிய  வகை தகவல்    உங்களுக்கு குறுந்தகவலாக வரும். இணைய மோசடி செய்பவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்புவார்கள்.
அதில், "உங்கள் பெயரில் உங்கள் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை அனுப்பலாம். விரும்பினால், அதனுடன் உள்ள லிங்கை கிளிக் செய்து கார்டைப் பெறுங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருப்பார்கள். அத்தகைய இணைப்பு உங்களுக்கு அனுப்பப்பட்டால், அந்த இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டாம் என பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரி சுப்பாராவ் எச்சரித்துள்ளார், 

நீங்கள் அந்த செய்திக்கு மறுமொழி பகிர்ந்தால், அல்லது அவர்களது சொல்படி புத்தி செயலிக்குள் சென்றால் சைபர் குற்றவாளிகளால் உங்கள் கைப்பேசி முடக்கம் செய்யப்பட்டு, உங்கள் முழு விபரம் அவர்களுக்குச் செல்லும்.

அடுத்து உங்கள் கைப்பேசியின் முழு விபர பட்டியில்  உங்கள் கேலரி, உங்கள் தொடர்பு எண்கள் திருடப்படுவதோடு உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் திருடப்பட்டு விடும்.

இதனால்  நீங்கள்   நிதி மோசடியில் சிக்கிக் கொள்ளலாம். 

எனவே இந்த இனிய புத்தாண்டு லிங்க்குகளில் எதையும் கிளிக் செய்யாமல் கவனமாக இருங்கள் என்று சுப்பாராவ் கேட்டுக்கொண்டார். 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset