நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தென் கொரிய விமான விபத்தில் மலேசியப் பயணிகள் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை : விஸ்மா புத்ரா

பெட்டாலிங் ஜெயா: 

தென் கொரியாவில் ஏற்பட்ட விமான விபத்தில்  மலேசியப் பயணிகள் இருப்பது குறித்த எந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தவில்லை என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது. 

சியோலிலுள்ள மலேசியத் தூதரகம் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து தகவல்களைச் சேகரித்து, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி, இந்த சம்பவத்தில் மலேசியர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

முன்னதாக, இன்று காலை தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி தரையில் மோதியதில் விபத்துக்குள்ளானது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset