நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2018இல் அன்வாருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு,  அரச மன்னிப்பு வாரியத்தின் கீழ் அளிக்கப்பட்டதா?: அக்மால்

கோலாலம்பூர்:

கடந்த 2018ஆம் ஆண்டு கெடிலான்  தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பு, மன்னிப்பு வாரியத்தின் கீழ் அளிக்கப்பட்டதா?.

அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் அக்மால் சாலே இந்த கேள்வியை எழுப்பினார்.

அன்வார் பாலியல் குற்றத்திற்காக மன்னிப்பு பெற்று ஐந்தாண்டு சிறைத்தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது, ​​அப்போதைய பிரதமர் துன் மகாதீர் முஹம்மத், நம்பிக்கை கூட்டணி 2018 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு இன்னும் அமைச்சரவையை கூட  அமைக்கவில்லை.

அந்த நேரத்தில் அன்வார் இப்ராஹிம், மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் இருந்து  மன்னிப்பு பெற்றபோது, ​​அது மன்னிப்பு வாரியத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதா? என்று முகநூல் வாயிலாக அவர்  கேள்வி எழுப்பினார்.

முன்னதாக கடந்த 14ஆவது பொது தேர்தலுக்கு பின் சில நாட்களில அன்வார் முழு பொது மன்னிப்பைப் பெற்றார்.

மூன்று வருட சிறைத் தண்டனைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.

அப்போது மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் முஹம்மது Vயால் மன்னிப்பு வழங்கப்பட்டதாக அவர் நாடாளுமன்றத்தில் கூறியதாக  அக்மால் குறிப்பிட்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset