நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மன்மோகன் சிங் இறுதி சடங்குக்கு இடம்: காங்கிரஸ் மோடிக்கு இடையில் மோதல்

புது டெல்லி: 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இறுதி சடங்கு நடத்தி அந்த இடத்தையே நினைவகமாக மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

ஆனால், இறுதிச் சடங்கு முடிந்த பிறகுதான் இடம் ஒதுக்கப்படும் என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

அந்தக் கடிதத்தில், நாட்டு மக்களின் நலனுக்கு பாடுபட்டவர் மன்மோகன் சிங். சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில் அதை சீரமைக்க மன்மோகன் சிங் ஆற்றிய பணிகள் மறக்க முடியாதது.

பிரதமராக மன்மோகன் இருந்தபோது அவரது உரைகளை உற்று கவனிப்பேன் என்று அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அவருக்கு நினைவகம் அமைப்பதற்கு ஏதுவான இடத்தில் இறுதிச் சடங்கு நடத்தப்பட வேண்டும். மறைந்த முன்னாள் பிரதமர்களுக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்தில் நினைவகம் அமைக்கும் நடைமுறையின்படி மன்மோகன் சிங்குக்கும் இடம் ஒதுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

முன்னாள் பிரதமருக்கு இடமளிக்காமல் ஒன்றிய அரசு அவமதித்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெயராம் ரமேஷ் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பாக  ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மன்மோகன் சிங்குக்கு நினைவகம் அமைக்க இடம் ஒதுக்கப்படும் என ஒன்றிய அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு கார்கேவிடமும், மன்மோகன் சிங் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. இறுதிச் சடங்குகளை நடத்தவும் கூறப்பட்டது.

அதன் பின்னர் அறக்கட்டளை அமைக்கப்பட்ட பிறகுதான் நினைவகத்துக்கான இடம்  ஒதுக்க முடியும் என ஒன்றிய அரசு தெரிவித்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset