நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பாகிஸ்தான் நாட்டின் தரை வழி எல்லையை மூடியது இந்தியா

காஷ்மீர்: 

இரு தினங்களுக்கு முன் காஷ்மீரில் இருந்த சுற்றுலா பயணிகள் மீது கொடூரமான துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன. 

இந்த பயங்கரவாத தாக்குதல் இந்தியாவையே பெருமளவில் உலுக்கியது. 

இந்நிலையில் இந்தியா அதன் அண்டை நாடான பாகிஸ்தான் உடன் தரை வழி எல்லையை மூடியது. 

மேலும், பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா விதித்த சிறப்பு விசா திட்டமும் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக இந்திய அரசாங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. 

இந்த தாக்குதல் இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான அரசு தந்திர உறவுகளை சிக்கலுக்கு வழிவகுத்துள்ளது 

26 பேர் கொல்லப்பட்ட இந்த சம்பவத்தில் இதுவரை எந்தவொரு நாடோ அல்லது இயக்கமோ பொறுப்பேற்று கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset