நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை

இஸ்லாமாபாத்:

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் பாகிஸ்தான் துண்டித்துள்ளது. 

அதன்படி இந்தியா விமானங்களுக்கான வான்வழியை பாகிஸ்தான் மூடியுள்ளது. 

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியிருக்கும் நிலையில்,

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பதில் நடவடிக்கையை தொடங்கியிருக்கிறது. 

குறிப்பாக சிந்து நீர் தடை செய்துள்ள இந்தியாவின் நடவடிக்கை கோழைத்தனமானது என பாகிஸ்தான் கூறியுள்ளது.

மேலும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முக்கிய அமைச்சர்கள், முப்படைத் தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்திய சிறிது நேரத்திலேயே இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. 

இந்தியாவுடனான அனைத்து வர்த்தகமும் நிறுத்தப்படுவதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. 

பாகிஸ்தான் வழியாக மற்ற நாடுகளுக்கும் இந்தியா வணிகம் மேற்கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset