நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு 

கோலாலம்பூர் : 

அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்துள்ளது. 

இன்று காலை நிலவரப்படி, 1 அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்  4.4665-க்கு வர்த்தகமானது.  

ஜப்பானிய யெனுக்கு எதிராக  மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 2.8373 இலிருந்து 2.8310 ஆக சரிந்துள்ளது. 

பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக  மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு, 5.5967 இலிருந்து 5.5956 ஆக சரிந்துள்ளது. 

யூரோ நாணயத்திற்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.6448 இலிருந்து  4.6550 ஆக  உயர்ந்துள்ளது. 

மற்ற ஆசிய நாடுகளின் நாணயங்களுடன் ஒப்பிடும்போது மலேசிய  ரிங்கிட் கலவையாக வர்த்தகமாகியுள்ளது. 

சிங்கப்பூர் டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 3.2875 இலிருந்து  3.2868 ஆக சரிந்துள்ளது.

தாய்லாந்து பாட் -க்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின்  மதிப்பு 13.0340 இலிருந்து 13.0779 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தோனேசிய ரூபியாவிற்கும்  பிலிப்பைன்ஸ்  பெசோவிற்கும் எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பில் மாற்றம் இல்லை. 

1 மலேசிய ரிங்கிட், இந்திய ரூபாய் 19.05 காசுக்கு விற்பனையானது.

- தர்மவதி கிருஷ்ணன் & அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset