நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

புது டெல்லி: 

நாடாளுமன்றத்தில் சட்டமேதை அம்பேத்கரை அவமதித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைக் கண்டித்து ஒரு வாரகால போராட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்ற பெயரை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருவதைவிட கடவுளின் பெயரை கூறியிருந்தாலாவது புண்ணியம் கிடைக்கும் என்று அமித் ஷா கூறினார்.

இதுகுறித்து காங்கிரஸின் தேசிய பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், அமித் ஷாவின் ராஜிநாமா கோரி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் குடியரசுத் தலைவருக்கு புகார் மனுவை காங்கிரஸ் தெண்டர்கள் சமர்ப்பிக்க உள்ளனர் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset