நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தேர்தல் டிஜிட்டல் ஆவணங்களை அளிக்காத வகையில் விதிமுறையை திருத்தியது ஒன்றிய அரசு

புது டெல்லி:

தேர்தலின்போது பதிவான விடியோ உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களை பொதுமக்கள் பெற முடியாத வகையில் விதிமுறைகளில் ஒன்றிய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் 1961இன் 93வது விதிமுறையின்படி, தேர்தல் தொடர்பான கண்காணிப்பு கேமிரா காட்சிகள், இணையவழியில் ஒளிபரப்பப்படும் காட்சிகள் ஆகியவற்றைப் பெற்று ஆய்வு செய்யலாம்.

இதை ஏஐ எனும்  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பொய்யான தகவல்களாக மாற்றக் கூடும் எனக் கருதி ஒன்றிய அரசு விதிமுறையில் திருத்தம் செய்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் பொதுச்செயலர்கள் ஜெய்ராம் ரமேஷ், இது தேர்தல் நடைமுறையின் வெளிபடைத்தன்மையை சிதைக்கும் மற்றொரு முயற்சி. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்படும் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset