
செய்திகள் வணிகம்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவு
மும்பை:
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 85 ரூபாய் 4 காசுகளாக குறைந்துவிட்டது.
புதன்கிழமை வர்த்தக நேர முடிவில் 84 ரூபாய் 96 காசுகளாக இருந்த ஒரு டாலர் மதிப்பு இன்று மதியம் ரூ.85.04 ஆக வீழ்ச்சி அடைந்தது.
ஒரு டாலரின் மாற்று மதிப்பு ரூ.85.04ஆக தொடங்கிய செலாவணி மதிப்பு மேலும் சரிந்து ரூ.85.07ஆக உள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதத்தை 0.25% குறைத்ததை அடுத்தும் ரூபாய் மதிப்பு சரிந்தது.
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 2 மாதங்களில் 4,600 கோடி டாலர் குறைந்துள்ளதும் ரூபாய் மதிப்பு சரிய காரணம். பங்குச்சந்தையில் இருந்து அந்நிய நிறுவன முதலீடுகள் வெளியேறியதும் ரூபாய்க்கு எதிராக டாலர் மதிப்பு உயரக் காரணமாகும்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 3, 2025, 12:12 pm
தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am
குவைத் மண்ணில் விளைந்த வாழைப்பழங்கள்: முதல் முறையாக வணிக முறையில் விற்பனைக்கு வருகின்றன
August 8, 2025, 12:29 pm
மலேசியாவில் புகழ் பெற்ற டோம்யாம் உணவகம் ராமநாதபுரத்தில் திறப்பு
August 7, 2025, 9:29 pm