செய்திகள் தொழில்நுட்பம்
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு
கேப் கனாவெரல்:
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்ப அழைத்துவரும் திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அவர் அங்கு ஆறு மாதங்களுக்கு மேல் தங்கியுள்ளார். இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவருடன் சென்றுள்ள பட்ச் வில்மோருக்கு பதிலாக மாற்று விஞ்ஞானிகளை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் இருவரையும் பூமிக்குத் திரும்ப அழைக்கும் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் போயிங் உருவாக்கியுள்ள ஸ்டார்லைனர் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோருடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த ஜூன் 5ஆம் தேதி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 17, 2025, 10:28 pm
2 விண்கலன்களை இணைத்து இஸ்ரோ சாதனை
January 17, 2025, 12:06 pm
இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மீதான தடைகளை நீக்கியது அமெரிக்கா
January 16, 2025, 11:13 am
அமெரிக்காவிலிருந்து நிலாவில் ஆய்வு நடத்த 2 லேண்டர்கள் அனுப்பப்பட்டன
January 12, 2025, 8:37 pm
விண்வெளியில் நடக்க உள்ள சுனிதா வில்லியம்ஸ்
January 5, 2025, 8:45 pm
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமணி விதைகள் முளைத்தன: இஸ்ரோ
January 4, 2025, 3:41 pm
மைக்ரோசாப்ட் இந்த நிதியாண்டில் 80 பில்லியனைச் செயற்கை நுண்ணறிவில் செலவிடும்
December 12, 2024, 11:47 am
ChatGPT சேவை உலகளாவிய நிலையில் திடீர் முடக்கம்: பயனர்கள் புகார்
December 10, 2024, 10:43 am
நவீன மனிதக் குளியல் இயந்திரத்தை ஜப்பானின் சயின்ஸ் கோ நிறுவனம் கண்டுபிடித்துள்ளது
November 20, 2024, 8:47 am