நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

குழந்தை வரம் வேண்டி கோழி குஞ்சை விழுங்கிய ஆடவர் பலி: சத்தீஸ்கரில் பயங்கரம் 

ராய்பூர்:

குழந்தை வரம் வேண்டி 35 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் உயிருடன் உள்ள கோழி குஞ்சை விழுங்கிய நிலையில் சம்பந்தப்பட்ட ஆடவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இருப்பினும், அவரின் வயிற்றுக்குள் இருந்த கோழி குஞ்சு உயிருடன் இருந்தது. இந்த சம்பவம் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் நிகழ்ந்தது 

மரணமடைந்த நபரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தபோது மருத்துவர்களே ஒரு கனத்தில் அதிர்ச்சி அடைந்தனர். 

அப்போது ஆடவர் விழுங்கிய கோழி குஞ்சு உயிருடன் இருந்ததாக அவர்கள் அறிந்தனர். 

கோழி குஞ்சு விழுங்கிய போது மூச்சு திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நபர் மரணமடைந்ததிருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர். 

தவறான போதனை மற்றும் மூட நம்பிக்கை காரணமாக ஓர் உயிர் பறிபோயுள்ளது அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset