நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி - இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க கூட்டறிக்கை

புதுடெல்லி: 

"மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமான முறையில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி - இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க ஆகியோர் ஒப்புக்கொண்டனர். 

ஆக்ரோஷமான நடத்தை அல்லது வன்முறையைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்" என்று இந்தியா - இலங்கை கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. 

இதற்கான நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியாவும் இலங்கையும் தங்கள் கூட்டாண்மையை விரிவுபடுத்துவதற்கான எதிர்கால நோக்கத்தை ஏற்றுக்கொண்டன. விரைவில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முடிக்க முடிவு செய்துள்ளன. 

மின்சார இணைப்பு மற்றும் பெட்ரோலிய குழாய்களை நிறுவுவதன் மூலம் ஆற்றல் உறவுகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளன.

பரந்த அளவிலான பேச்சுவார்த்தையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியா - இலங்கை பொருளாதார கூட்டாண்மையை வலுப்படுத்த இரு தரப்பும் முடிவு செய்துள்ளன. டிஜிட்டல் மற்றும் எரிசக்தி இணைப்பு ஆகியவை ஒத்துழைப்பின் முக்கிய தூண்களாக இருக்கும். மின்சாரம் இணைப்பு மற்றும் பெட்ரோலிய குழாய்களை நிறுவுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இலங்கையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை இந்தியா வழங்கும்.

இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்தும் வகையில் ராமேஸ்வரம், தலைமன்னார் இடையே படகு சேவை தொடங்கப்படும். எங்கள் பாதுகாப்பு நலன்கள் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொள்கிறோம்.

பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் முடிக்க முடிவு செய்துள்ளோம்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset