நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

20 நாள்களாக உண்ணாவிரதத்தில் இருக்கும் விவசாயி: சமாதானத்தில் அதிகாரிகள்

சண்டீகர்:

பஞ்சாபில் 20  நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத் தலைவர் ஜகஜித் சிங் தலேவாலை, டிஜிபி, மத்திய உள்துறை அமைச்சக இயக்குநர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஜகஜித்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி  அவரது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் இந்தச் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி அவருடைய கோரிக்கைகளை கேட்டறிந்தோம்.

அனைத்து வசதிகளையும் உடைய ஆம்புலன்ஸும் இங்கே கொண்டுவரப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் நிபுணர்கள் குழுவும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

விவசாயிகளின் கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்த விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன் என்றார்.

தனது உடல்நலத்தின் மீது மத்திய அரசுக்கு அக்கறை இருந்தால் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும். அதுவரை சிகிச்சையை ஏற்க போவதில்லை என்று உண்ணாவிரதத்தில் உள்ள ஜகஜித் தெரிவித்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறினர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset