நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சபரிமலையில் 29 நாள்களில் 22 லட்சம் பக்தர்கள், ரூ.163.89 கோடி வருவாய்

திருவனந்தபுரம்: 

சபரிமலையில் கடந்த 29 நாள்களில் 22.67 லட்சம் பக்தர்கள் வழிபட்டுள்ளனர்.

திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத் தலைவர் பி.எஸ்.பிரசாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த டிசம்பர் 14ம் தேதி வரையிலான 29 நாள்களில், சபரிமலையில் 22,67,956 பக்தர்கள் வழிபட்டனர்.

கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 4.51 லட்சம் அதிகரித்துள்ளது.

சபரிமலைக்கு மொத்தம் ரூ.163.89 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இதில் பிரசாத விற்பனை மூலம் ரூ.82.67 கோடியும், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.52.27 கோடியும் கிடைக்கப் பெற்றுள்ளது.  
கடந்த ஆண்டைவிட நிகழாண்டு பிரசாத விற்பனை மூலம் கிடைத்த வருமானம் ரூ.17.41 கோடி அதிகரித்துள்ள நிலையில், உண்டியல் காணிக்கை ரூ.8.35 கோடி உயர்ந்துள்ளது என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset