நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பெங்களூரு ஐடி ஊழியர் தற்கொலை: மனைவி, மாமியார், மைத்துனர் கைது

பெங்களூரு: 

பெங்களூரில் மனைவி குடும்பத்தினரால்  துன்புறுத்தப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட ஐடி பொறியாளர் அதுல் சுபாஷின் மனைவி, மனைவி, மாமியார், மைத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அதுல் சுபாஷ் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரின் துன்புறுத்தல் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாக கடிதத்தில் குற்றம்சாட்டினார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் அவரது மனைவி நிகிதா சிங்கானியா, அவரது குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக பெங்களூரு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியா ஹரியாணாவின் குருகிராமிலும் அவரது தாயார் நிஷா சிங்கானியா மற்றும் சகோதரர் அனுராக் சிங்கானியா ஆகியோர் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜிலும் கைது செய்யப்பட்டனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset