நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சவூதி அரேபியாவில் உலகக் கிண்ணம் FIFAவின் முடிவுக்கு ஆஸ்திரேலியா கண்டனம்

மெல்பர்ன்: 

2034 உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்தும் பொறுப்பை பிபா சவூதி அரேபியாவுக்கு வழங்கியதை ஆஸ்திரேலியாவின் தொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்கம் கண்டித்துள்ளது.

குறிப்பிடத்தக்க மனித உரிமை அபாயங்கள் போட்டியில் இணைக்கப்பட்டுள்ளன என்றும் அதே நேரத்தில் அதன் தொடர்பில் தீங்கு ஏற்படுவதைத் தடுக்கும் திறன் ஃபிஃபாவிடம் உள்ளதாக என்று கேள்வி எழுப்பியுள்ளது.

2034ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியை ஏற்று நடத்தும் பொறுப்பை பிபா அதிகாரபூர்வமாக புதன்கிழமை சவூதி அரேபியாவுக்கு வழங்கியது.

ஆஸ்திரேலியாவின் தொழில்முறை காற்பந்து வீரர்கள் சங்கத்தின் தலைவர் பியூ புஷ் கூறுகையில், 

அனைத்துலக கால்பந்துச் சமூகம், இந்த முடிவுக்கு பிபாவை பொறுப்பேற்க வைப்பது மிகவும் முக்கியமானது.

இந்த போட்டியுடன் தொடர்புடைய குறிப்பிடத்தக்க மனித உரிமை தொடர்பான அபாயங்கள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

உலகின் மிகவும் மதிப்புமிக்க கால்பந்து நிகழ்வை ஏற்று நடத்தும் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம், 2034 ஆண்கள் உலகக் கிண்ணப் போட்டியால் பாதிக்கப்பட்ட அனைவரின் உரிமைகளும் நிலைநிறுத்தப்படுவதையும் பாதுகாக்கப்படுவதையும் சவூதி அரேபியாவும் பிபாவும் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset