நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்கில் லியோனல் மெஸ்ஸி?: 6 மாத ஒப்பந்தத்தில் அழைத்து வர முடிவு

லண்டன்:

லியோனல் மெஸ்ஸி இங்கிலாந்து பிரிமியர லீக்கிற்கு கொண்டு வர  பெப் கார்டியோலா ஆர்வமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரிமியர் லீக்கில் மென்செஸ்டர் சிட்டி தற்போது மோசமான நிலையில் உள்ளது.

கடைசி 11 போட்டிகளில் எட்டு தோல்விகளையும் இரண்டு சமநிலைகளையும் ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது.

இதனால் தனது அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்குக் கொண்டுவர, மெஸ்ஸியை ஆறு மாத கடன் ஒப்பந்தத்தில் கார்டியோலா ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக உள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

மெஸ்ஸி தற்போது இந்தர்மியாமியில் உள்ளார்.

மேலும் இணை உரிமையாளர் டேவிட் பெக்காம் அத்தகைய நடவடிக்கையைத் தடுக்க முயற்சிக்க மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. 

மெஸ்ஸி ஜூலை 2023 இல் இந்தர் மியாமியில் இணைந்தார்.

மேலும் 39 போட்டிகளில் விளையாடி 34 கோல்களை அடித்து 18 கோல் அடிக்க உதவியாகவும் இருந்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset